செய்திகள் உண்மை உடனுக்குடன்

அணுசக்தியை ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறது இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்

700x350-pakistan

இந்தியா அணுசக்தி உபகரணங்களை ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜக்காரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஜக்காரியா, கடந்த பத்தாண்டுகளாக இந்தியா, அணுசக்தி எரிபொருள், இயந்திரங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் இந்த ஆயுதக்குவிப்பு, தெற்காசியா மற்றும் பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பை எச்சரிப்பதாக உள்ளது. ஊடகங்கள் மற்றும் புள்ளிவிவரங்களால் மறைக்கப்படும் உண்மை என்னவென்றால், இந்தியாவின் அணு ஆயுதக்குவிப்பு உலகின் மற்ற நாடுகளை விட வேகமானது. இதுவரை இந்தியா சுமார் 2600 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அணுசக்தி நிபுணர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் இந்தியாவின் அணு ஆயுதங்கள் குறித்த மறைமுகத்தன்மை குறித்தும், சர்வதேச பாதுகாப்பு குறித்தும், அணுசக்தியை அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர் என்றார்.

மேலும், காஷ்மீரில் ஆர்.எஸ்.ஆஸ். அமைப்பை காஷ்மீரி அல்லாதவர்களை வைத்து இந்திய அரசு கட்டமைக்கின்றது. காஷ்மீரிகளை அச்சுறுத்தி அவர்களுக்கான தன்னாட்சி உரிமையை மறுக்கிறது. ஊடகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களைத் தடுக்கிறது. இந்தியாவின் இச்செயல்களை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும் என்றும் ஜக்காரியா கூறினார்.